வோர்ட்பிரஸ்.காம் பதிவுகளை அண்மையில் மறுமொழியப்பட்டவை பகுதியில் திரட்டுவது எப்படி? - PoC
Posted by இன்பா (Inbaa) at 5:01 PMவோர்ட்பிரஸ்.காம் (www.wordpress.com) வலைத் தளத்திற்கு மாற முடிவெடுத்து சற்றே தயங்கி நிற்பவர்கள் அல்லது வோர்ட்பிரஸ்.காம் க்கு வலைப்பதிவை மாற்றி விட்டு மீண்டும் ப்ளாக்கருக்கே (www.blogger.com) திரும்பி விடாலாமா என்று யோசிப்பவர்களிடம் காரணம் கேட்டிருக்கிறீர்களா?
ஆயிரம் காரணம் சொல்லலாம், அதுல இதுவும் கண்டிப்பாய் இருக்கும்.
வார்ப்புருக்களில் திரட்டிகள் (தமிழ்மணம், தேன்கூடு) அளிக்கும் நிரலை சேர்க்க முடியாமை.
இப்பொழுதெல்லாம் பதிவு போட்டா... பத்து நிமிடத்திற்கு மேல் திரட்டிகளின் முகப்பில் இருந்தாலே பெரிய விசயம், இல்லை பதிவு கொஞ்சமாவது சூடா இருக்கனும் (ஐஸ்கிரீம் சாப்பிடுவது எப்படி? பதிவானாலும் சரி). அதெல்லாம் நமக்கு சரியா வராதுன்னு சொல்றவங்க, ' நமக்கு நாமே திட்டப்படி' தனக்கு தானே மறுமொழி இட்டாவது முகப்பில் உள்ள 'அண்மையில் மறுமொழியப்பட்டவை' பகுதியில் முகம் காட்டிக் கொள்ளலாம். ஆனா வோட்பிரஸ்.காம் பதிவர்களுக்கு இது கூட சாத்தியமில்லை.
அதெல்லாம் தான் தெரியுமே ... வோர்ட்பிரஸ் பதிவுகளை அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகளில் தெரிய வைப்பது எப்படி? வோர்ட்பிரஸ்.காம் பதிவுகளின் மறுமொழியை திரட்டிகளால் அவர்கள் அளிக்கும் ஜாவாஸ்கிரிப்ட (Javascript) நிரல்களை இணைக்காமல் திரட்ட முடியாதா?
வோர்ட்பிரஸ், ப்ளாக்கர் இரண்டுமே மறுமொழிகளுக்கான ஓடையினையும் (RSS feed for comment) அளிக்கின்றன, இந்த ஓடைகளின் மூலமாக சேகரிக்கலாம். ஆனால் 2000 பதிவுகளை தானியக்கமாக ஒன்றன் பின் ஒன்றாக அலசி சேகரிப்பதானால் ஒரு சுழற்சிக்கு குறைந்த பட்சம் 15-20 நிமிடங்கள் ஆகக்கூடும். தற்போதைய 2000 பதிவுகள் எதிர்காலத்தில் 10,000 ஆகும் பட்சத்தில்...?
எனவே பதிவுகள் தாங்களாகவே தங்களின் மறுமொழி நிலவரத்தை திரட்டிகளுக்கு அறிவிக்கும் தற்போதைய முறையே சிறந்தது. சரி இதை வோட்பிரஸில் எப்படி செய்வது?
வோர்ட்பிரஸ்.காம்-ன் வார்ப்புருவில் (Template) எந்த நிரலையும் பயன்படுத்த அனுமதியில்லை என்பது சரி தான், ஏதோ போனாப் போகுதுன்னு படங்களை மட்டும் வார்ப்புருவில் இனைத்துக் கொள்ள மட்டும் அனுமதி அளித்திருக்கிறார்கள். இது போதாதா நமக்கு ... தூள் கிளப்பலாம்ல ...
உதாரனத்திற்கு ...
< img width="1px" src="http://www.url.com/ping.cgi/flower.jpg" / >
என 'Text Widget' - ல் அல்லது 'Links' இனைத்துக் கொள்ளலாம்.
(Hack -la இது தாத்தா காலத்து டெக்னிக்)
இனி ஒவ்வொரு முறை பதிவுக்கு செல்லும் போதும் இந்த நிரல் திரட்டியில் உள்ள ping.cgi என்னும் நிரலியை அழைக்கிறது. (flower.jpg எல்லாம் ச்சும்மா) . இனி திரட்டியில் உள்ள ping.cgi நிரலி செய்ய வேண்டியது, அந்தப் பதிவின் செய்தியோடையிலிருந்து தனக்குத் தேவையான மற்ற விவரங்களை (மறுமொழி எண்ணிக்கை ...) எடுத்துக் கொண்டு மறுமொழி சேகரிப்பு செயலிக்கு அறியத் தருவது.
கொஞ்சம் தலையச் சுத்தி மூக்க தொடுற மாதிரி தான், சுருக்கமா சொல்றதுன்னா ...
ப்ளாக்கருக்கான நிரல் பதிவின் உரல், மறுமொழி எண்ணிக்கை, நேரம் ஆகியவற்றை திரட்டிக்கு அளிக்கிறது.
அதற்குப் பதில் வோட்பிரஸ்-க்கு ஆன இந்த முறை பதிவின் உரலை மட்டும் திரட்டிக்கு அளிக்கிறது, திரட்டி தனக்கு தேவையான மற்ற விவரங்களை (மறுமொழி எண்ணிக்கை ...) ஒடைகளிலிருந்து (RSS) பெற்றுக் கொள்ளும்.
PoC:
Labels: வலைப்பதிவு
1 Comment:
-
- Anonymous said...
10:48 PMம் ... ஹீம்
Subscribe to:
Post Comments (Atom)