திரட்டிகள்: தமிழ்மணம் | தேன்கூடு | தமிழ்ப் பதிவுகள்

Semmozhi Master  
Download now or listen on posterous
Semmozhi.mp3 (13683 KB)

செம்மொழியான தமிழ்மொழி ...

'வந்தே மாதரம்' மாதிரி ஏ.ஆர்.ரஹ்மான் தமிழுக்கென்று (தமிழ்த்தாய் வாழ்த்து?) ஒரு பாடல் இசையமைத்து  தரவேண்டுமென்ற கோரிக்கைக்கு காலம் கனிந்திருக்கிறது. உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு பாடலாக, கலைஞரின் இயற்தமிழிற்கு  இசைப்புயலின் இசைத்தமிழ்! கடுமையான ஹாலிவுட் பணிகளுக்கு இடையே... கலைஞர் கூட கொஞ்சம் காத்திருந்திருப்பார் போல! (உன்கிட்ட பாட்டு வாங்குறது புலிப்பால் கறக்குறது மாதிரின்னு பாரதிராஜா ஒருமுறை சொன்னார்).

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று TMSன் கம்பீரமான குரலில் தொடங்குகிறது பாடல்... அண்மையில் வெளியான பெரும்பாலான ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் இது போலவே முதல் வார்த்தையால் அழைக்கப்படுவதில்லை ஹோசான்ன..., மன்னிப்பாயா..., ஆரோமலே (விண்ணைத்தாண்டி வருவாயா), உசுரே போகுதே (ராவணன்). கட்டுடைத்தல்! TMS, ஏ.ஆர்.ரஹ்மான், சுசிலா, ஹரிஹரன், யுவன், GV பிரகாஷ்  என 30 பாடகர்கள்  அணிவகுத்து அணி செய்திருக்கிறார்கள். அத்தனை பாடகர்களும் 'ழ' வை சரியாக உச்சரித்து இருக்கிறார்கள் 'ஸ்ருதிஹாசன்' உட்பட (Blaze இன்னும் கொஞ்சம் உச்சரிப்பில் மெனக்கெட்டிருக்கலாம்)!

'தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு (நீராடும்...) மாற்றா?' என்ற சந்தேகம் இப்போது 'இல்லை'!

Posted via email from inbaa's posterous

0 Comments:

Post a Comment