திரட்டிகள்: தமிழ்மணம் | தேன்கூடு | தமிழ்ப் பதிவுகள்

முதல் பகுதி

ஆப்ரா (Opera) :

நெடுங்காலமாகவே களத்திலிருந்தாலும், பெரும்பாலும் மூன்றாவது நான்காவது இடத்திலே தான் இருந்திருக்கிறது. விண்டோஸ்(Windows), மேக்(Mac), லினக்ஸ்(Linux), சோலாரிஸ்(Soalaris) மட்டுமல்லாமல் செல் பேசிகள் (Cell Phones), Nintendo WII போன்ற விளையாட்டு சாதனங்கள் என எல்லா இடங்களிலும் இருப்பை பெருக்கி கொள்ள ஆரம்பித்துள்ளது ஆப்ரா.

+


விரைவுச் சுழற்றி (Speed Dial):

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது மாதிரி, ஒரு குறிப்பிட்ட வலைத் தளங்களுக்கு தொடர்ந்து மாறி மாறி செல்லும் வழக்கம் உள்ளவர்களுக்கு இது கலக்கலான வசதி. நீங்கள் அடிக்கடி விரும்பிச் செல்லும் பக்கங்களை இதில் தொகுத்துக் கொள்ளலாம். உலாவியை/புதிய கீற்றை (Tab) திறக்கும் போது உங்கள் விருப்ப பக்கங்களை துண்டுக் காட்சிகளாக (Thumbnail Preview) தொகுத்துக் காட்டும். ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு விசைப்பலகை குறுக்கு வழியையும் (Keyboard Short Cut) அமைத்துக் கொள்ளலாம்.

கீற்று காட்சி (Tab Preview):

திறந்து கிடக்கும் பத்து பதினைந்து கீற்றுகளில் எதேனும் ஒரு கீற்றை தேட வேண்டுமெனில் ஒவ்வொரு கீற்றின் கதவையும் தட்டிப் பார்க்க வேண்டியதிருக்கும். ஆப்ரா உலாவியில் கலைந்து கிடக்கும் கீற்றுகளில் ஏதேனும் ஒன்றை தேடுவது மிகச் சுலபம் கணிணி சுட்டியை (Mouse) கீற்றின் மேல் கொண்டு சென்றால் அந்தப் பக்கத்தினை ஒரு துண்டுக் காட்சியாக காட்டும். ஆனால் ஃபயர்ஃபாக்ஸ்-ல் இந்த வசதியை பெற நீட்சியை (Add on) தரவிறக்கம் செய்ய வேண்டும்.

குரல் வழி உலாவி (Voice Browsing):

தற்போதைய உலாவிகளில் ஆப்ராவில் மட்டுமே இந்த குரல் வழியாக உலாவும் வசதி உள்ளது. புதிய கீற்றை திறப்பது - மூடுவது, பின்னோக்கி - முன்னோக்கி செல்வது, பக்கத்தினை பெரிது - சிறிது படுத்திக் காட்டுவது, நீங்கள் தெரிவு செய்ததைப் படித்து காட்டுவது மற்றும் இன்ன பிறவற்றையும் குரல் வழி கட்டளைகளின் மூலமே செய்து கொள்ளலாம். இப்போதைக்கு உங்களுக்கு ஆங்கிலமும், உங்களுடைய ஆங்கிலம் அதற்கும் தெரிய வேண்டும். அவ்வளவே! இல்லேன்னா 'சொன்னபடி கேளு ... மக்கர் பண்ணாதே ...' பாடனும்.

குப்பைத்தொட்டியும், குறிப்பேடும் (Trash & Notes):

"கொஞ்சம் போன் நம்பர் குறிச்சிக்கிறீங்களான்னு" யாரவது கேட்கும் போது தான் 'நிராயுத பாணியாக' பேந்த பேந்த முழித்துவிட்டு அப்புறம் கைக்கு கிடைக்கிறது இல்ல ஹமாம் சோப் போட்ட கையிலோ எழுதி 'தொலைப்போம்'. வலை உலாவும் உங்கள் கண்ணுல படுற விசயங்கள கண்ட கண்ட இடத்துல எழுதாம் வலை உலாவியிலேய குறித்துக் கொள்வதற்காக ஒரு குறிப்பேடு வசதியும் உள்ளது.

அப்புறம் நீங்கள் படிச்சு கிழிச்சுப் போட்ட பக்கங்களையெல்லாம் சேகரிக்க ஒரு குப்பைத் தொட்டி. தவறுதலாக மூடிய கீற்று மற்றும் பக்கங்களை இங்கே இருந்து மீட்டுக் கொள்ள முடியும்.

W3C ( World Wide Web Consortium ) ன் பல பரிந்துரைகள் முழுமையாக நிறைவேற்றப் பட்டிருக்கின்றன.

இவைத் தவிர நிரல் பலகை(Widgets), கோப்பு பகிர்வு (Bit Torrents), கணிணி சுட்டியின் அசைவுகளில் பக்கங்களை புரட்டிப் போடுதல் (mouse gestures), போலி உரல் (url) கள் மூலம் உங்கள் அடையாங்களை திருடப்படுவதை தடுக்கப் பாதுகாப்பு வசதிகள் என பல. உங்களுக்கு வேண்டிய வேண்டாதவற்றை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம் (Highly Customizable).

-

  • செயல் திறன் சஃபாரி மற்றும் ஃபயர் ஃபாக்ஸ் உடன் ஒப்பிடும் போது சற்று பின் தங்கியே உள்ளது.
  • அதன் மஞ்சள் நிற நீட்சிப் பட்டை (Scroll Bar).

சஃபாரி (Safari) :

வலை உலாவி சந்தையில் 'சஃபாரி' உலாவியின் பங்கை அதிகரிப்பதின் முதற் கட்டமாய் கடந்த ஜீன் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் 'விண்டோஸ்' இயங்குதளத்திற்கான் 'சஃபாரி' உலாவியின் சோதனைப் பதிப்பினை (Beta) வெளியிட்டது. 'மேக்' (Mac - OSX) இயங்குதளங்களில் மட்டுமே இது வரை கோலோட்சி வந்த 'சஃபாரி' இப்போது 'விண்டோஸ்' இயங்குதளத்தில் ...

+


செயல் திறன் (Performance):

ஆப்பிள் நிறுவனத்திற்கு இதற்கு முன் 'விண்டோஸ்' இயங்குதளத்தில் ' ஐ -டியூன்ஸ்(iTunes)' என்ற மென்பொருளை (Software) வடிமைத்த அனுபவம் மட்டுமே உள்ளது, இருந்த போதிலும் கூட எடுத்த எடுப்பிலே 'விண்டோஸ்' இயங்கு தளத்தில் மற்ற எந்த உலாவியை விடவும் அதி வேகமும், மிகுந்த செயல் திறனமும் மிக்கதாய் 'சஃபாரி' யை முன் வைக்கிறது. ஏறக்குறைய 'இண்டர்நெட் எக்ஸ்புளோரரை' விட இரு மடங்கு வேகமாகவும் ஃபயர் ஃபாக்ஸை விட 1.5 மடங்கு வேகமாகவும் பக்கங்களை தரவிறக்கம் (Load) செய்கிறது. ஜாவாஸ்கிரிப்ட் (Javascript) மற்றும் செயலியை துவக்குதலில் (Application Launch) மட்டும் 'ஆப்ரா' ஒரளவு கடும் போட்டியை கொடுக்கின்றது.


(இந்த சோதனை முடிவுகள் ஆப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டவை என்றாலும், யார் வேண்டுமானாலும் இச்சோதனைகளை நடத்தி முடிவுகளை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.)

இரகசியமானது ... (Private Browsing):

உங்கள் அந்தரங்கங்கள், இரகசியங்களுக்கு மதிப்பளித்து இந்த வசதியளிக்கிறது சஃபாரி. இந்த வசதியை முடுக்கிவிட்ட (Edit -> Private Browsing) பின்னர் நீங்கள் வலையில் உலாவும் போது நீங்கள் செல்லும் வலைத் தளங்கள் மட்டுமில்லாது, கூகுள் போன்ற தேடு இயந்திரங்களில் தேடிய வார்த்தைகள், தரவிறக்கம் செய்த கோப்புகள், படிவங்களில் பயன்படுத்திய விவரங்கள் போன்ற எதனையும் சேமிப்பதில்லை.

அது சரி, ஃபயர் ஃபாக்ஸ் போன்ற உலாவியில் உள்ள 'உலாவி நடவடிக்கைகளை நீக்கு' (Clear History) க்கும் இதற்கும் என்ன பெரிய வித்தியாசம் என்று கேட்கிறீர்களா? உலாவி நடவடிக்கைகளை நீக்கு' (Clear History) உலாவியில் உங்கள் நடவடிக்கைகளை எல்லாம் ஒட்டு மொத்தமாக அழித்து விடும். ஏறக்குறைய துவைத்துக் காயப் போட்ட மாதிரி, ஆனால் சஃபாரியில் நீங்கள் 'இரகசிய உலாவுதலை (Private Browsing)' முடுக்கி (enable) விடுவதற்கு முன்னால் பார்த்த வலைப் பக்கங்கள் போன்ற விவரங்கள் இருக்கும், இந்த வசதியை முடுக்கி விட்ட பின்னர் நடப்பவை மட்டும் சேகரிக்கப்படாது. தப்பு செய்யும் போது சந்தேகம் வராத மாதிரி செய்யனும் இல்ல?

மாற்றத்தக்க எழுத்துப் பகுதி(Resizable Text Field):

சில தளங்களில் ஒரு கட்டுரை அளவுக்கு எழுத வேண்டிய விசயத்துக்கு தம்மா துண்டு எழுத்துப் பகுதியை (Text Field) ஒதுக்கியிருப்பார்கள். அதிலும் எழுதியதைப் படிக்கனும்னா அவ்வளவு தான். சஃபாரியில், கணிணி சுட்டியைக் கொண்டு எழுத்துப் பகுதியை தேவையான அளவுக்கு பெரிதாக்கவோ, சிறிதாக்கவோ முடியும்.

வண்ணக்கலவை(Color Management):

சஃபாரி வலை உலாவி தற்போது வழக்கத்தில் உள்ள மற்ற எந்த வலை உலாவியை விடவும் படங்களை (images) மிகத்துல்லியமாக, நுணுக்கமாக, ஆழ்ந்த வணணங்களுடன் காட்டுகின்றன. இதற்கு காரணம் சஃபாரி பயன்படுத்தும் வண்ணக் கலவை முறை. பெரும்பாலான மற்ற வண்ண உலாவிகள் sRGB முறையையே பயன்படுத்துகின்றன. ஃபயர் ஃபாக்ஸ் தனது 3.0 பதிப்பில் இது போன்ற மேம்படுத்தப்பட்ட வண்ண வசதியை அளிக்கவிருக்கிறது.

துரித பின்செல் (snap back):

ஒரு பக்கத்திலிருந்து துவங்கி பத்து பதினைந்து பக்கங்கள் சென்ற பிறகு மீண்டும் துவங்கிய பக்கத்திற்கு செல்ல ஒவ்வொரு பக்கமாக பின்னோக்கி (Back) செல்ல வேண்டியதில்லை, துரித பின்செல் பொத்தானை (snap back button) அழுத்தினாலே போதும் நீங்கள் துவங்கிய பக்கத்திற்கு கொண்டு செல்லும். இது போன்றதொரு வசதி (Fast Forward) ஆப்ராவிலும் உள்ளது ஆனால் அவ்வளவு தெளிவாக அல்ல.


இவைத் தவிர, உங்கள் புத்தகக் குறிப்புகளை (Bookmarks) மற்ற எந்த உலாவியை விடவும் மிக அழகாக ஒழுங்குப் படுத்திக் கொள்ள முடிகிறது. ஐ-டியூன்ஸில் (iTunes) பாடல்கள், புகைப் படங்களை வரிசைப்படுத்துவது போன்று செய்ய முடிகின்றது. ஃபயர் ஃபாக்ஸைப் போன்ற ஆனால் சற்றே மேம்படுத்தப் பட்ட பக்க வரிசை தேடல் (inline Search), வலைத் தளங்களில் உள்ள படிவங்களை தானியக்கமாக நிரப்புவது (Auto Form Fill), மிகச் சிறந்த பாதுகாப்பு வசதிகள் என வலம் வருகிறது சஃபாரி.

-

  • சில பாதுகாப்பு குறைபாடுகள், வெளிடப்பட்ட அன்றே சில குறைபாடுகளும் வெளிவந்துவிட்டன.
  • நம்பகத் தன்மை, சோதனைப் பதிப்பு என்பதாலோ சில சமயங்களில் செயலிழக்கிறது, முழுமையான் பதிபிற்காக காத்திறுக்க வேண்டும் போல.
  • ஒருங்குறி வசதி இன்னும் முழுமையடையவில்லை.

இண்டர்நெட் எக்ஸ்புளோரர் ஒன்றும் தீண்ட தகாத உலாவி அல்ல, சொல்லப் போனால் மற்ற எந்த உலாவியை விடவும் ஒழுங்குறி பயன்பாட்டு பக்கங்களை சிறப்பாகவே காட்டுகிறது. ஆனால் அது மட்டுமே போதாது அல்லவா ... மற்ற வலை உலாவிகளெல்லாம்,

  • வலைப் பக்கம் தரவிறக்கம் அடைவதை காட்டுவதற்காக மட்டும் ஒரு பட்டையை (Status Bar) தனியாக பயன் படுத்தாமல், உரல் முகவரி பட்டையிலேயே (Address Bar) காட்டுவது (ஆப்ரா, சஃபாரி) ,
  • தேவையான சமயத்தில் மட்டுமே நீட்சிப் பட்டையை (Scroll Bar) காட்டுவது (ஆப்ரா, சஃபாரி, ஃபயர் ஃபாக்ஸ், நெட்ஸ்கேப் நேவிகேட்டர்),
  • புதுப்பித்தல்(Refresh), நிறுத்து(Stop) பொத்தான்கள் (Buttons) என இரண்டிற்குப் பதில ஒரே பொத்தானே சூழலுக்கு ஏற்ற மாதிரி புதுப்பித்தல் பொத்தானாகவும், நிறுத்து பொத்தானாகவும் மாறிக் கொள்வது (Boolean) (ஆப்ரா, சபாரி, நெட்ஸ்கேப் நேவிகேட்டர்).
என சின்ன சின்ன விசயங்களைக் கூட மேலும் சிறப்பாக்க முயற்சிக்கின்றன. ஆனால் ஏகபோகத்தின் விளைவு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் ஆறு ஆண்டுகாலமாக ஒரு துறும்பைக் கூட கிள்ளிப் போட முயற்சித்ததாக தெரியவில்லை. IE7 கூட ஃபயர் ஃபாக்ஸின் பிரதியே தவிர புதிதாக எதையும் புரட்டிப் போட்டுவிடவில்லை.

இவ்வளவு வசதிகளும், பயன்பாடுகளும் சரி, கணிணி நினைவகத்தில் (RAM Usage) எவ்வளவு கொள்ளளவு ஆக்கிரமிக்கின்றன? ஒவ்வொரு உலாவியிலும் 5 வலைத் தளங்களை வெவ்வேறு கீற்றுகளில் திறந்து ஒரு மணி நேரம் கழித்துப் பார்த்தலில் ஆப்ரா(24,740K) குறைந்த அளவே நினைவகத்தை பயன்படுத்துகிறது, அதற்கு அடுத்து அடுத்தாற் போல் சஃபாரி(32,904K), ஃபயர் ஃபாக்ஸ்(66,028K), நெட்ஸ்கேப் நேவிகேட்டர்(84,296K).


உங்கள் தெரிவு ?

0 Comments:

Post a Comment